ETV Bharat / entertainment

அவதார்-2 தீம் சாங்கை வெளியிட்ட கனடா பாடகர் தி வீக்கெண்ட்

author img

By

Published : Dec 8, 2022, 3:05 PM IST

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாக இருக்கும் அவதார்; தி வே ஆஃப் வாட்டர் படத்தின் தீம் சாங்கை கனடிய பாடகர் ‘தி வீக்கெண்ட்’ நேற்று (டிச.7) வெளியிட்டார்.

Etv Bharatஅவதார்-2  தீம் சாங்கை வெளியிட்ட   கனடா பாடகர் தி வீக்கெண்ட்

வாஷிங்டன்: உலக அளவில் அதிகமான ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அவதார்-2; தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வரும் டிச.16அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் பல கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இப்படத்தின் தீம் பாடலான 'Nothing is Lost' நேற்று (டிச.7) வெளியாகியுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த பாடகர் மற்றும் பாடலசிரியரான ‘தி வீக்கெண்ட்’ இந்தப் பாடலை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை ‘தி வீக்கெண்ட்’ எழுதியுள்ளார். ஸ்வீடிஸ் ஹவுஸ் மாஃபியா மற்றும் சைமன் ஃபிராங்கிளின் தயாரித்துள்ளனர். இதன் ஒரிஜினல் பாடலை கிராமி விருது பெற்ற பாடகரான சைமன் ஃபிராங்கிளின் பாட உள்ளார்.

'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஎச் பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:IMDb 2022ஆம் ஆண்டிற்கான 'மிகவும் பிரபலமான இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.