ETV Bharat / entertainment

புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'லாந்தர்' - பூஜை ஓவர்.. படப்பிடிப்பு எப்போது? - laandhar

மைனா திரைப்படத்தின் கதாநாயகனான விதார்த் நடிக்க உள்ள 'லாந்தர(laandhar)' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படம் புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக புதிய கோணத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 11, 2023, 5:03 PM IST

சென்னை: இயக்குநர் சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'லாந்தர்' படத்தில் விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எம் சினிமா தயாரிப்பில் விதார்த் - சுவேதா டோரத்தி நடிப்பில் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாக உள்ளது 'லாந்தர்' திரைப்படம். இயக்குநர் ராம்குமாரிடம் 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும், இயக்குநர் செல்லா அய்யாவு உடன் 'கட்டா குஸ்தி' திரைப்படத்திலும் இணை இயக்குநராக பணியாற்றியவர் சாஜிசலீம்.

இவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான 'விடியும் வரை காத்திரு' திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் சாஜிசலீமின் இரண்டாவது படம் 'லாந்தர்' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து அதன் பிறகு நாயகனாக நடித்து வருபவர்.

பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்த மைனா திரைப்படம் விதார்த் திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது எம் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சாஜிசலீம் இயக்கத்தில் 'லாந்தர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம், "இதுவரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது 'லாந்தர்'. இந்த புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி," என்று கூறினார்.

'லாந்தர்' திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஞானசௌந்தர் கையாள உள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜெரோம் ஆலனும், சண்டைக் காட்சிகளை விக்கியும், கலை இயக்கத்தை தேவாவும் கையாள உள்ளனர். இந்நிலையில் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லரான 'லாந்தர்' திரைப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என் எதிர்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம்.. விரைவில் 'தங்கலான்' ஷூட்டிங்கில் இணைகிறார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.