மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த வாரம் டெங்கு உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். எந்தவித படப்பிடிப்புகளிலும் பங்கேற்கவில்லை. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாசின் 16வது சீசனை தொகுத்து வழங்கிய அவர், அதன் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கரண் ஜோஹர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் டெங்குவில் இருந்து குணமடைந்துவிட்டார். அதனால் இன்று(அக்.27) முதல் பிக் பாஸ் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், இனி வரும் எபிசோட்களை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குவார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'ஃபோன் பூட்' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகை கத்ரீனா கைஃப், நடிகர்கள் இஷான், சித்தாந்த் சதுர்வேதி ஆகியோரும் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம்