ETV Bharat / entertainment

"அரசியல் தலைவர்களுக்கு கல்வியறிவு இல்லை" : கிளம்பிய எதிர்ப்புக்கு நடிகை கஜோல் விளக்கம்!

நாட்டை ஆளும் தலைவர்கள் பலருக்கு கல்வி அறிவு இல்லை என்று பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது கருத்து குறித்து கஜோல் விளக்கமும் அளித்துள்ளார்.

Kajol
நடிகை கஜோல்
author img

By

Published : Jul 9, 2023, 3:48 PM IST

மும்பை: பாலிவுட் நடிகை கஜோல், இந்தியில் ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயேங்கே' ஆயிரம் வாரங்கள் ஓடி பெரும் வரவேற்பை பெற்றது. இவர் 'மின்சாரக் கனவு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வேலையில்லாப் பட்டதாரி-2' திரைப்படத்தில் கஜோல் நடித்தார்.

அண்மையில் கஜோல் நடித்திருந்த இந்தி வெப் சீரிஸ் 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' நெட்ஸ்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இவர் நடித்துள்ள 'தி ட்ரையல்' வெப் சீரிஸ் வரும் 14ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. சுபர்ன் வர்மா இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் கஜோல் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஜோல், "இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. உண்மையில் மிக மிக மெதுவாகவே உள்ளது. ஏனென்றால், நாம் நமது பாரம்பரியங்களில் பழமையான சிந்தனைகளில் மூழ்கி இருக்கிறோம். இதற்கும் நமது கல்விக்கும் தொடர்பு உள்ளது. மேலும், எந்தவித கல்வி அறிவும் இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்களால் நாம் ஆளப்படுகிறோம். அவர்களில் பலருக்கு சரியான கண்ணோட்டம் இல்லை, கல்விதான் இந்த கண்ணோட்டத்தை தரும்" என்று தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் தொடர்பான நடிகை கஜோலின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். பலர் தனிப்பட்ட முறையில் கஜோலை விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக பத்திரிகையாளர் முகமது ஜூபைர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த காணொலியில் கஜோல் யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால், பக்தர்கள் பலர் கஜோல் தங்களது தலைவரை அவமதிப்பதாக எடுத்துக் கொண்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். முகமது ஜூபைர் பக்தர்கள் என்று பாஜகவினரை மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.

கஜோலின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது கருத்து குறித்து கஜோல் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், "நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்தை மட்டுமே கூறினேன். எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது எனது நோக்கம் அல்ல, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாமன்னன் வசூல் எவ்வளவு? - வெற்றிவிழா மேடையில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.