ETV Bharat / entertainment

தாத்தா வயதில் தந்தையான நடிகர்... 83 வயதில் 4வது குழந்தை! - Holly Wood Star al facino expect 4th child

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Al Facino
Al Facino
author img

By

Published : May 31, 2023, 3:53 PM IST

Updated : May 31, 2023, 5:21 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் : 83 வயதான காட்பாதர் பட புகழ் அல் பாசினோ, விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1972ஆம் ஆண்டு வெளியான காட்பாதர் படத்தின் மூலம் பிரபலமானவர் அல் பாசினோ. 1940 ஆம் ஆண்டு பிறந்த அல் பாசினோ காட் பாதர் மூன்று பாகங்களிலும் நடித்து இருந்தார்.

மெதட் ஆக்டிங் வழிமுறை நடிப்பை பின்பற்றுபவரான அல் பாசினோ பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். ஹீட், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கொண்டு இருந்தார். ஆஸ்கர் விருது டோனி விருது, பிரைம் டைம் எம்மி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று குவித்து உள்ளார்.

83 வயதாகும் அல் பாசினோ தற்போது 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். அவரது பெண் தோழியான நூர் அல்பாஃ கருவுற் நிலையில் விரைவில் இருவருக்கும் குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 29 வயதாகும் நூர் அல்பாஃ தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதலே அல் பாசினோ மற்றும் நூர் அல்பா இணை ரகசியமாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வந்தது.

இருப்பினும் தங்களுக்குள் உள்ள உறவு குறித்து இருவரும் வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில், நூர் அல்பா கர்ப்பமாக இருப்பதாகவு, அல் பாசினோ விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அல் பாசினோவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் காதலி மெடில் தோஹன் மூலம் ஒரு குழந்தையும், 2வது காதலி பெவரிலி டி ஏஞ்சலோ மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் அல் பாசினோ தந்தையாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பழக்கமான நூர் அல்பாஃ மூலம் 4வது குழந்தைக்கு அல் பாசினோ தந்தையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலிகளுடன் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்து சென்றாலும் அல் பாசினோ தன் மூன்று குழந்தைகளுடன் நல்உறவு கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று பேரும் சேர்ந்து தங்களுக்கு வர உள்ள 4வது சகோதரர் அல்லது சகோதரிக்காக மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் காட்பாதர் படத்தில் அல் பாசினோவோடு நடித்த மற்றொரு நடிகர் ராபர்ட் டி நிரோவும் தனது 7வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். 79 வயதான ராபர்டின் காதலி டிபானி சென்னுக்கு குழந்தை பிறந்து உள்ளது.

இதையும் படிங்க : Wrestlers Protest: அரசுக்கு 5 நாள் கெடு.. உ.பி.யில் விவசாய சங்கங்கள் மகா பஞ்சாயத்து போராட்டம்!

Last Updated : May 31, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.