ETV Bharat / entertainment

ஆஸ்கரில் வாங்கிய அறை - கிறிஸ் ராக் ஷோவிற்கான டிக்கெட் விலை ஆறுமடங்கு எகிறியது! - will smith

சில தினங்களுக்கு முன்பாக நடந்த 2022ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தன் மனைவி குறித்து கிண்டல் செய்ததால் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆஸ்காரில் வாங்கிய அரை! -  ஆறு மடங்கிற்கு மேல் அதிகரித்த டிக்கெட் விலை!

author img

By

Published : Mar 31, 2022, 10:35 PM IST

ஆஸ்கர் விருது என்றாலே அதிக அளவிலான பிரமிப்பும், பல சாதனையாளர்களின் பெயர்களும்தான் அனைவருக்கு நினைவுக்கு வரும். இந்த 2022ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ் ராக்கை, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்த நிகழ்வுதான் எனலாம். ஏனென்றால், யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் வில் ஸ்மித் ஆத்திரமடைந்து ராக்கை அறைந்துவிட்டார். இந்த விருது விழாவின் அமெரிக்க ஒளிபரப்பில் இந்த சர்ச்சை நிகழ்வு நீக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு இருந்தது. இருப்பினும், வெளிநாடுகளில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வில் ஸ்மித், ராக்கை அறைந்ததும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வில் ஸ்மித் தனது மனைவிக்கு இதற்கான பதில் அளிக்கும் இடத்தை கொடுத்திருக்க வேண்டும். இச்செயல் அவரின் ஆணாதிக்கத்தையே காட்டுகிறது எனவும் கருத்துகள் எழுந்தன. இந்த நிகழ்வை வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவியின் தரப்பிலிருந்து மட்டுமே பலரும் அணுகியிருந்தார்கள். இந்நிலையில் அந்த மாபெரும் மேடையில் இந்த உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய சபையில் அறை வாங்கிய நபரின் மனநிலை என்ன என அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஆவல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ராக்கின் நிகழ்ச்சி டிக்கெட் விலை ஆறு மடங்கிற்கும் மேல் எகிறியது!: கிறிஸ் ராக் அடிப்படையில் ஒரு நகைச்சுவைக் கலைஞர். இதற்கு முந்தைய அவரது ஸ்டாண்டுஅப் காமெடி நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் 46 டாலராக விற்கப்பட்டு வந்தது. ஆஸ்கரில் அறை வாங்கியதற்குப் பிறகு கிறிஸ் ராக் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 341 டாலராக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் கடந்த ஒரு மாதத்தை விட இந்த ஒரு சில தினங்களில் விரைவாக விற்றுவிட்டது.

ஆஸ்கர் அரங்கில் நடந்த நிகழ்வுக்கான எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த கிறிஸ், இந்த நிகழ்ச்சியில் ஏதேனும் கூறுவார் என்ற ஆவலோடு இந்த டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கியிருக்கக்கூடும் எனத்தெரியவருகிறது.

இதையும் படிங்க:Oscars 2022: ஆஸ்கர் விருதுகள் 2022 முழுவிவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.