ETV Bharat / entertainment

'அவதார் 2' சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது! - அவதார் தி வே ஆஃப் வாட்டர்

ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' 28வது விமர்சகர்கள் தேர்வு விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது.

’அவதார் 2’ சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது

author img

By

Published : Jan 16, 2023, 3:52 PM IST

ஹைதராபாத்: 28வது விமர்சகர்கள் தேர்வு விருதுகளில் திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்திடம் இழந்தது. கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதைப் பெற்றது.

"தி பேட்மேன்", "பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்", "எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்", "ஆர்ஆர்ஆர்" மற்றும் "டாப் கன்: மேவரிக்" ஆகியவை இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற படங்களாகும்.

இங்கு நடைபெற்ற விருது விழாவில் 'ஆர்ஆர்ஆர்' சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதை வென்றது. 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்பது 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய, 'அவதார்' இரண்டாம் பாகம் இப்போது உலக பாக்ஸ் ஆபிஸில் 14 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கடந்துள்ளது. இதன் மூலம், ஜேம்ஸ் கேமரூனின் திரைப்படம் 2022இல் வெளியான மற்ற திரைப்படங்களை விட இந்த மைல்கல்லை வேகமாக கடந்து சாதனைப் படைத்துள்ளது.

இந்த ஆண்டு மூன்று படங்கள் மட்டுமே 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளன. 'அவதார் இரண்டாம் பாகத்தைத் தவிர, 'டாப் கன்: மேவரிக்' மற்றும் 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' ஆகியவை 1 பில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளன.

இதையும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலித்த ஜெய்ஹிந்த்..! விருது வழங்கும் மேடையில் ராஜமௌலி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.