நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அதேபோல், விளாத்திகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் நச்சு ஆலையை விரிவு படுத்தக்கூடாது என்பதற்காக தான் இந்த தூத்துக்குடி மக்கள் அமையாதியாக போராடினார்கள். ஆனால், அந்த அப்பாவி மக்களை பழிவாங்கும் பொருட்டு அவர்களை அச்சுறுத்தவே அதிமுக அரசு அவர்களை சுட்டுக் கொலை செய்தனர். ஆகவே, இந்த கொலைகார அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து மத்திய பாஜகவும், அதிமுகவும் வாங்கிய நன்கொடைகளுக்காகவே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே, அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்த கொலைகார கூட்டத்துக்கு தேர்தலில் நாம் பாடம் கற்பிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் டெபாசிட் கிடைக்காமல் தோற்கப்போகும் தமிழிசைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சியில் இருந்தபோது மட்டுமின்றி, ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி திமுக தான். ஆகவே, கனிமொழிக்கு வாக்களித்து மக்களவைக்கு அனுப்பி வையுங்கள்” என கேட்டுக்கொண்டார்.