மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அதிஷி போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் டெல்லியின் கரோல் பாஹ், ரஜிந்தர் நகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தான் வழக்கு தொடர்ந்துள்தாகவும், சட்டப்பிரிவு 17-ன்படி கம்பீருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விரைவில் கம்பீர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதால் அவருக்கு வாக்களித்து உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள் என்றும் அதிஷி தெரிவித்துள்ளார்.