அதிமுக கூட்டணி, தேமுதிக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, தேமுதிக சார்பாக இதுவரை யாரும் டெல்லி சென்றது இல்லை. இந்த முறை டெல்லி செல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், கேப்டனை தொட்டால் அவன் செத்தான் என்பதற்கு உதாரணமாக கேப்டன் பற்றி பேசிய துரைமுருகன் வீட்டில் என்ன நடந்தது என்றும் கூறினார்.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதவர்கள் வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்டது. 2ஜியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம். அந்த வழக்குகளில் தப்பிக்கவே இலங்கை தமிழர்களை கொள்ள திமுக அரசு உடந்தையாக இருந்தது. திமுக குடும்பம் டெல்லியில் உள்ள குடும்பத்தின் காலில் விழுந்தது என்று கடுமையாக விமர்சித்தார்.
நதிநீர் இணைப்பு தொடர்பாக பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் உள்ளது. பிரதமர் யார் என்று கூற திராணி இல்லாத கூட்டணியாக திமுக-காங்கிரஸ் கூட்டணி உள்ளது. அது கண்களை கட்டிக்கொண்டு சாலையில் செல்வதற்குச் சமம். பாக்ஸிங் கத்துக்கொண்டு நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்க்காமல், பிரியாணி வாங்க காசு கொடுக்காமல் கடைக்காரர்களை தாக்குவது கேவலமாக உள்ளது. அதற்கு அவர்கள் காலில் விழுந்து இருக்கலாம். சொந்த அண்ணன் அழகிரியை மதிக்காத ஸ்டாலின் எப்படி மக்களை மதிப்பார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.