17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிவாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதற்கு பிரதமர் மோடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "2019 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு இரண்டாம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.