ETV Bharat / elections

தேர்தல் ரத்தால் களையிழந்து காணப்படும் வேலூர் தொகுதி!

வேலூர்: தமிழகத்தில் தேர்தல் களைகட்டி வரும் நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அத்தொகுதி களையிழந்து வெறுச்சோடி காணப்பட்டது.

தேர்தல் ரத்தால் களையிழந்து காணப்படும் வேலூர் தொகுதி!
author img

By

Published : Apr 18, 2019, 7:53 PM IST

38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் காரணமாக தமிழ்நாடே பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது. ஆனால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டதால், அத்தொகுதி மட்டும் கலையிழந்து காணப்படுகிறது.

தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, பிற தொகுதிகளைப் போல வேலூர் தொகுதியிலும் தேர்தல் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இத்தொகுதியில் அதிமுக திமுக உட்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தல் பரப்புரை சூடுபிடித்து கொண்டிருந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் நண்பர்கள் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தாங்கள் கடும் ஏமாற்றம் அடைந்ததாக வேலூர் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த தேர்தலை மிகவும் எதிர்பார்த்ததாகவும் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தாங்கள் மன கஷ்டத்தில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேர்தல் ரத்தால் களையிழந்து காணப்படும் வேலூர் தொகுதி!

இதுகுறித்து துரைப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் "யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்வது தவறான ஒரு முன்னுதாரணம். தேர்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல அது ஒருமுறை மட்டுமே வரக்கூடியது. எனவே நாங்கள் வாக்களிப்பதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளோம" என்றார்.

எங்களின் ஜனநாயக உரிமையை தடுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இதேபோல் துரைப்பாடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் கூறுகையில், "நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வேலூருக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேள்விபட்டேன் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எனக்கு வீண் செலவு ஏற்பட்டுள்ளது திரும்பவும் தேர்தல் அறிவித்தால் மீண்டும் செலவைப் பார்க்காமல் வந்து வாக்களிப்பேன்" என்றார். இதுபோன்று பெரும்பாலான மக்கள் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது எங்களின் ஜனநாயக உரிமையை தடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் நடைபெறாததால், இத்தொகுதிகளை இழந்து வெறுச்சோடி காணப்படுகிறது.

தேர்தல் ரத்தால் களையிழந்து காணப்படும் வேலூர் தொகுதி

மக்களின் மனநிலை என்ன? விரிவான தொகுப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைப்பெற்று வருகிறது தேர்தல் காரணமாக தமிழகமே பரபரப்பாக காட்சி அளிக்கும் சூழ்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி மட்டும் தேர்தலை ரத்து செய்யப்பட்டதால் தேர்தல் கலையிழந்து காணப்படுகிறது பிற தொகுதிகளைப் போலவே கவேலூருக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது வேலூரில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் உள்பட மொத்தம் 24 பேர் களத்தில் இருந்தனர் இதற்கிடையில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் நண்பர்கள் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இந்த விவகாரத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் கடும் ஏமாற்றம் அடைந்ததாக வேலூர் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த தேர்தலை மிகவும் எதிர்பார்த்ததாகவும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் தாங்கள் மன கஷ்டத்தில் இருப்பதாகவும் மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்

இதுகுறித்து துரைப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன் நம்மிடம் தெரிவிக்கையில், " யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்வது தவறான ஒரு முன்னுதாரணம் தேர்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல ஒரு முறை மட்டுமே வரக்கூடிய தேர்தல் எனவே நாங்கள் வாக்களிப்பதற்காக மிகவும் ஆர்வமாக இருந்தோம் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளோம" என்றார். இதேபோல் துரைப்பாடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் கூறுகையில், "நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வேலூருக்கு வந்தேன் ஆனால் இங்கு வந்த பிறகு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேள்விபட்டேன் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எனக்கு வீண் செலவு ஏற்பட்டுள்ளது திரும்பவும் தேர்தல் அறிவித்தால் மீண்டும் செலவைப் பார்க்காமல் வந்து வாக்களிப்பேன் என்றார் இதுபோன்று பெரும்பாலான மக்கள் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது எங்களின் ஜனநாயக உரிமையை தடுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் நடைபெறாததால் இங்குள்ள மக்கள் இன்று தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.