மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர்தல் பரப்புரை நடத்தியது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன், ”தமிழகத்தில் மொத்தம் இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று மக்கள் விரும்பும் அணி. மற்றொன்று மக்கள் விரும்பாத அணி.
மோடி அரசு இந்தியாவை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச்செல்கிறது. பாதுகாப்பான அரசாக திகழ்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும். தென்னிந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது” என்றார்.