தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
‘பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை ஒன்றரை கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 15 பைசாகூட வங்கிக் கணக்கில் விழவில்லை.
விவசாயிகள் போராடும்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்திருப்பது அப்பட்டமான நாடகம்’ என்றார்.