ETV Bharat / elections

வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அலுவலர் சோதனை!

திருவண்ணாமலை: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புத் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Tiruvannamalai collector
author img

By

Published : May 22, 2019, 2:59 PM IST

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு எப்படி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது என விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் நாளன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவான அறையிலிருந்து எடுத்துவரப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் வாக்குகள் எண்ணப்படுகிறது.

முதல் சுற்று முடிவுகள் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு சரி பார்த்தவுடன் வெளியிடப்படும். இதன்படி ஒவ்வொரு சுற்றுக்களாக மக்களவைத் தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

இம்முறை சுவிதா என்ற செயலி மூலம் ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இறுதிச் சுற்று முடிந்தவுடன் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் உடன் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட்டு அதனையும் சேர்த்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்குமான 400 கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டுவருகிறது’ எனக் கூறினார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Intro:திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்

Body:திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கூறியதாவது,

திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வேட்பாளர்கள் ,வேட்பாளர்களின் முகவர்களுக்கு எப்படி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது என விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் நாளன்று காலை 8 மணி அளவில் வலுவான அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் வாக்குகள் எண்ணப்படுகிறது.

முதல் சுற்று முடிவுகள் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு சரி பார்த்தவுடன் வெளியிடப்படும்.

இதன்படி ஒவ்வொரு சுற்றுக்களாக பாராளுமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தமுறை சுவிதா என்ற செயலி மூலம் ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வாக்கு என்னும் இறுதி சுற்று முடிந்தவுடன் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் உடன் சரிபார்க்கப்பட்ட பின்னரே தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட்டு அதனையும் சேர்த்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மின்சாரம், குடிநீர் ,கழிவறை ஜெனரேட்டர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணிகளில் தல ஆயிரத்து 400 வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 800 பணியாளர்கள் பணி புரிய உள்ளார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000 காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் இரண்டு பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் .

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் உட்பட வேட்பாளர்கள், முகவர்கள் ,பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் போது கண்டிப்பாக அடையாள அட்டைகள் கொண்டு வர வேண்டும்.

மேலும் காலை மதியம் உணவு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவ முகாம் ,ஆம்புலன்ஸ் ,தீயணைப்பு வாகனம் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்கு எண்ணும் பணிகள் பார்வையிடுவதற்கு ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பொது பார்வையாளர் வீதம் மொத்தம் நான்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தலா 200 சிசிடிவி கேமரா மூலம் மொத்தம் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆரணி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் ஆகிய மையங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Conclusion:திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.