கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட ராமானுஜர் தொழில்பேட்டை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஊழலை பற்றிப் பேசுவதற்கு திமுக எந்த அருகதையும் கிடையாது. கனிமொழியும், ராசாவும் சிறைக்கு சென்றதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது. அதன்பிறகு, ஆட்சி அமைத்த அதிமுக அரசு தற்போது 1,500 மெகா வாட் மின் உற்பத்தியை உபரியாக கையிருப்பு வைத்துள்ளது, என்றார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவேன் என கூறுவது சாத்தியமில்லை என்றும் அப்படி கொடுக்க நினைத்தால் நாட்டை விட்டு தான் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.