ETV Bharat / elections

பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டாயம் வேலைவாய்ப்பை உருவாக்குவேன்- தமிழிசை உறுதி - பாஜக வேட்பாளர்

தூத்துக்குடி: வீட்டில் உள்ள ஒருவரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டாயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை
author img

By

Published : Apr 4, 2019, 7:18 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை இன்று ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி கிழக்கு தொகுதி ஆகிய இடங்களில் பரப்புரையில்ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, "ஒட்டபிடாரம் பகுதியில் உள்ள மீனவ மக்களைசந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். அப்போது அந்த பகுதியில் உள்ள மக்கள்பிரதமர் மோடி கொண்டு வந்ததிட்டத்தின் மூலம் அதிக பலன் கிடைத்தாக தெரிவித்தனர்.

வீட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டாயம் வேலைவாய்ப்பை உருவாக்குவேன்-தமிழிசை

ஆழ்கடலில்மீன்பிடிப்பதற்கு ஏதுவாக மீன்களை பதப்படுத்தும் வகையில் கடலுக்குள்ளும், கரையிலும் பதப்படுத்தும் மையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டில் உள்ள ஒருவரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கட்டாயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். கனிமொழி தனக்கு கிடைத்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமான சம்பவம். ஆனால், அதை திமுக வேட்பாளர் துருப்பு சீட்டு போல் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்"இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி கிழக்கு தொகுதி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோரிடத்தில் அவர் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
ஒட்டபிடரம் பகுதியில் உள்ள மீனவ மக்கள் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். மக்கள்
பிரதமர் மோடி கொண்டு வந்த  திட்டத்தின் மூலம் கிடைத்த பலன்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மீன்களை பதப்படுத்த கடலுக்குள்ளும், கரையிலும் குளிர்சாதன பதப்படுத்தும் மையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ள்து.

வீட்டிற்கொருவருக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டாயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி செலவாகும் என்பதையும் நான் உத்தேசித்து குறிப்பிட்டுள்ளேன்.

தூத்துக்குடி மக்களுக்கு பயனுள்ள விஷயத்தை செய்ய விரும்புகிறேன்.

ராஜ்யசபா உறுப்பினராக கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறாக பயன்படுத்தினார். இலங்கையில்
லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்து கொண்டு அவர்களுக்கு துணை போனார்கள்.

"டிரான்பாராமிங் தூத்துக்குடி" என்பதை முன்னிலைப்படுத்தி இங்கே பல திட்டங்களை செயல்படுத்த உள்ளேன். குட்டி ஜப்பான் என சொல்லும் அளவுக்கு தூத்துக்குடி மாவட்டம்
புதியம்புத்தூரில் ஆடை ஏற்றுமதி நடைபெறுகிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அதை ஏற்றுமதி நகரமாக மாற்றலாம்.
திருப்பதி போல் திருச்செந்தூரையும் ஆன்மிக வாரியமாக முன்னேற்றலாம்.

2-ஜி கொள்ளையடித்த பணத்தை வைத்தே இன்று திமுகவினர் 40 தொகுதிகளும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பிரதமர் மோடி நடந்து கொள்கிறார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடக்கவில்லை.

தூத்துக்குடி பரந்து விரிந்த தொகுதி. துரதிஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்துகொண்டு நான் ஆதற்கு ஆதரவாக இருந்ததாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார் கனிமொழி. ஸ்டெர்லைட் பற்றி திமுக பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

இந்த தொகுதி வளர்ச்சி அடைய வேண்டிய தொகுதி. திமுகவினரின் எண்ணம் கிளர்ச்சி. எனது எண்ணம் வளர்ச்சி என கூறினார்.

Byte in FTP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.