நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கருப்பையாவிற்கு விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 80 அடி சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ளது திமுக என்று கடுமையாக சாடிய சீமான், தொடர்ந்து தேர்தல் ஆணையத்தையும் குற்றம் சாட்டினார்.
ஒரு ஜனநாயக நாடு என்றால் எல்லா சின்னத்தையும் போல் எனது சின்னத்தையும் வைத்து போட்டியிட வேண்டும். ஆனால், தற்போது அந்த வாக்கு இயந்திரத்தில் எங்களது சின்னத்தை மங்கலாக போட்டு நாட்டில் விவசாயி இருக்கவே கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். மேலும், மக்கள் அனைவரும் வாக்களிக்க செல்லும் முன் எந்த சின்னம் சரிவர தெரியவில்லையோ அதுதான் எங்கள் சின்னம் அதில் வாக்களியுங்கள் என்றார். அதனைத் தொடர்ந்து, “எப்படியெல்லாம் ஓட்டு கேட்க வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?” என்று நகைச்சுவையாக பேசினார்.