ETV Bharat / elections

புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை...! - நமச்சிவாயம் தகவல் - puducherry state leader namasivayam

புதுச்சேரி : திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள வரும் 17ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

puducherry
author img

By

Published : Oct 7, 2019, 11:47 AM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குள்பட்ட பகுதியான பாலாஜி நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், ”புதுவை காமராஜ் நகர் தேர்தல் பணிக்காக காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறோம். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது; தொகுதி மக்கள் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்

வரும் 17ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார் என்ற தகவலையும் நமச்சிவாயம் சொன்னார்.

Intro:திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி புதுச்சேரி வந்து காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர் ஜான் குமாருக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்

Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான பாலாஜி நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது இந்த திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம்

புதுவை காமராஜர் நகர் தேர்தல் பணி தீவிரமாக இருக்கிறது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் இத்தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறோம் இத்தொகுதி மக்கள் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் மேலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது வரும் 17ம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் இதையடுத்து தேர்தல் வியூகம் மேலும் வலுப்பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெறுவார் என மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தனது பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார் அப்போது முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர்

Conclusion:திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி புதுச்சேரி வந்து காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர் ஜான் குமாருக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.