ETV Bharat / elections

திமுக தலைவர் ஒரு புகார் பெட்டி - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

திண்டுக்கல்: திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருவதால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
author img

By

Published : Apr 5, 2019, 11:44 PM IST

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஜோதிமுத்துவை ஆதரித்து தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமானது மாம்பழம். இந்த மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் நமது வேட்பாளரை வாக்காளர்களாகிய நீங்கள் வெற்றியடைய செய்ய வேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை

மேலும், அதிமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார். திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருவதால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

திண்டுக்கல் 

திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருகிறார். இதனால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா தாக்கு

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து நத்தம் காந்தி கலையரங்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், திண்டுக்கல்  மாவட்டத்தில் பிரபலமானது மாம்பழம். இந்த மாம்பழத்தை நீங்கள் வெற்றியடைய செய்ய வேண்டும். தமிழகத்தில் அமைந்துள்ளது சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் ஆதரவுடன் அமைந்த மெகா கூட்டணி. இக்கூட்டணிக்கு போகும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். இதுவே நமது வெற்றியின் அறிகுறி. முதலமைச்சர், துணை முதலமைச்சர், கேப்டன், டாக்டர் அய்யா மற்றும் கூட்டணி தலைவர்களால் உறுதி செய்யப்பட்டது இந்த மெகா கூட்டணி.

முக்கனிகளில் முதல் கனி மாங்கனி.  இந்த மாங்கனி சிறப்பு வாய்ந்தது. ஆனால் இதன் வெற்றி என்பது உங்கள் கைகளில் அமைந்திருக்கிறது. மேலும், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்பார். அவர் தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருகிறார். இதனால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார். தேமுதிக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் மாபெரும்  வெற்றி பெறும் என கூறினார்.

இந்த பிரச்சார கூட்டத்தின் போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.