ETV Bharat / elections

இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியவர் மோடி - சரத்குமார் புகழாரம் - praises

ராமநாதபுரம்: இந்தியர்களின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம் பிரதமர் மோடி என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியவர் மோடி - சரத்குமார் புகழாரம்
author img

By

Published : Apr 12, 2019, 12:02 AM IST

ராமநாதபுரம் மக்களவைத்தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தை மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் வஞ்சித்தது.

கச்சத்தீவை தாரை வார்த்தது, இலங்கை தமிழர்கள் படுகொலை உள்ளிட்டவை திமுக ஆட்சியின் போதுதான் நடைபெற்றது. தற்போது, யாழ்பாணத்தில் தமிழர்களுக்காக 13 ஆயிரம் வீடுகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தவர் மோடி.

சமீபத்தில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலில் 48 துணை ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதில் தாக்குதலை உடனடியாக கொடுத்து நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டியவர் மோடி.

இந்தியர்களின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி தலைமையிலான ஆட்சிதான் காரணம். மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடியை ஆதரிக்க வேண்டும் எனப் பேசினார்.

Intro:ராமநாதபுரம்
ஏப்ரல் 11
20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது இந்தியர்கள் மதிப்பு உயர்த்தியவர் மோடி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

Body:ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் பரப்புரை மேற்கொண்டார் கூட்டத்தில் அவர் பேசியதாவது தமிழகத்தை வஞ்சித்து கட்சி திமுக என்றும் மத்தியில் காங்கிரஸ் கட்சி என்றும் குற்றம் சாட்டினார்
மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸும் சரி 15 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுகவும் மக்களுக்காக எந்த நலனையும் செய்யவில்லை என்றும், குடும்பத்திற்காக மட்டுமே செய்து கொண்டதாகவும் கூறினார் கச்சத்தீவை தாரை வார்த்தது, இலங்கை தமிழர்கள் படுகொலை, உள்ளிட்டவற்றில் திமுக ஆட்சியின் போதுதான் நடைபெற்றது என்றும் குற்றம் சாட்டினார்.

தற்போது மோடி ஆட்சியில் யாழ்பாணம் சென்று அங்கு மக்களுக்கு 13 ஆயிரம் வீடுகள், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை செய்தவர் காயத்திற்கு மருந்து கொடுத்தவர்
மோடி.

மோடி நாட்டுக்கு பாதுகாவலராக விளங்குகிறார் அதை கிண்டல் செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொள்வதையும் அவர் தெரிவித்தார். பாதுகாவலராக இருப்பதை மிக கடினமான விஷயம் என்றும் அதை மோடி சிறப்பாக கையாள்வதாகவும்,
சமீபத்தில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலில் 48 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதில் தாக்குதலை மோடி உடனடியாக கொடுத்து, நாட்டின் பாதுகாப்புக்கு நிலைநாட்டினர் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் எழுதிக் கொடுப்பதை கூட சரியாக வாசிக்கத் தெரியாது என்றும் அவர் எப்படி பிறரை குற்றம் சாட்டலாம் என்றும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசலாம் என்றும் கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி மக்களை காக்கவந்த கூட்டணி என்றும் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி எதற்காக வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தியர்களின் மதிப்பு 20 ஆண்டுகள் முன் இருந்ததை விட மிகப் பெரிய அளவில் உயர்ந்திருப்பதாகவும் இதற்கு மோடி தலைமையிலான ஆட்சியை காரணம் என்றும் மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடியை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல மாநிலத்தில் நலன்களைப் பெற மத்திய ஆட்சி மோடி அரசு அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.