ETV Bharat / elections

கரை வேட்டி கட்ட ஆசைதான் ஆனால்? - கமல் - தேர்தல் பரப்புரை

திருவாரூர்: கரை வேட்டி கட்ட ஆசைதான், ஆனால் அவர்களைப் போல் எண்ணி விடுவார்களோ என்றுதான் வேறு உடையில் வருகிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்
author img

By

Published : Apr 12, 2019, 7:26 AM IST

Updated : Apr 12, 2019, 7:35 AM IST

நாகை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் குருவைய்யா மற்றும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அருண் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் குப்பை கிடைக்கிறது. ஆனால் குடிநீர் மட்டும் கிடையாது.

கமல் தேர்தல் பரப்புரை

விவசாயம் நடக்கும் இடத்தில் தங்கமும், வைரமும் கிடைத்தால் அதை தோண்டி எடுக்கக் கூடாது. ஏனென்றால் அதை சாப்பிட நம்மால் முடியாது. அது புரியாமல் இங்கு மீத்தேன் எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு விவசாயத்தை அழித்து வருகின்றனர். முதலாளித்துவத்தோடு செயல்படும் மத்திய, மாநில அரசுகள் அகற்றப்பட வேண்டும்.

mnm-kamal-campaign-1
பிரசாரத்தில் பங்கேற்ற சிறுமி

எங்களுக்கும் கரை வேட்டி கட்ட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அவர்களைப் போல் எங்களை எண்ணிவிடுவார்களோ என்றுதான் வேறு உடையில் வருகிறோம்” என்றார்.

Intro:விவசாயம் நடக்கும் பூமிக்கு அடியில் தங்கமும் வைரமும் கிடைத்தால் அதை தோண்டி எடுக்கக் கூடாது. ஏனென்றால் தங்கத்தையும் வைரத்தையும் சாப்பிட முடியாது.
என கமலஹாசன் திருவாரூர் பிரச்சாரத்தில் பேச்சு.

Body:விவசாயம் நடக்கும் பூமிக்கு அடியில் தங்கமும் வைரமும் கிடைத்தால் அதை தோண்டி எடுக்கக் கூடாது. ஏனென்றால் தங்கத்தையும் வைரத்தையும் சாப்பிட முடியாது.
என கமலஹாசன் திருவாரூர் பிரச்சாரத்தில் பேச்சு.

திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் குருவைய்யா, திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக கமல் வருவதற்கு தாமதமானதால் ஒரு சிறுமி கமல் நடித்த உன்னால் முடியும் என்ற பாடலை பாடி அசத்தினார். மேலும் கமலஹாசனின் முகமூடி அணிந்து குட்டீஸ்கள் குத்தாட்டம் போட்டனர்.

பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் கமல் பேசியதாவது...

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை கிடைக்கிறது. அதை போன்று குடிநீர் கிடையாது. நான் குப்பை என்று சொன்னது அந்த குப்பைகளை எல்லாம் சேர்த்து சொன்னேன் எல்லாக் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.

விவசாயம் நடக்கும் இடத்தில் தங்கமும், வைரமும் கிடைத்தால் அதை தோண்டி எடுக்கக் கூடாது. ஏனென்றால் அதை சாப்பிட முடியாது அது புரியாமல் இங்கு மீத்தேன் எடுக்குறேன் என்று விவசாயத்தை அழித்து வருகின்றனர்.
இது முதலாளித்துவம் வீம்பு.முதலாளித்துவத்தோடு செயல்படும் மத்திய மாநில அரசு அகற்றப்பட வேண்டும்.
ஏழைகளுக்கு உதவாத இந்த அரசாங்கம் கவிழும்.

எங்களுக்கும் கரை வேட்டி கட்ட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அவர்களை போல் எங்களை எண்ணிவிடுவார்களோ என வேறு உடையில் வருகிறோம்.ஆனால் மறுபடியும் வேட்டிக்கான மரியாதையே மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும்.

எங்கள் வேட்பாளர்கள் தனி திறமை பெற்றவர்கள்,அது அவர்களின் வெற்றிக்கு பின்னர் உங்களுக்கு தெரிய வரும் என கூறினார்.

Conclusion:
Last Updated : Apr 12, 2019, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.