ETV Bharat / elections

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை- கேஎஸ் அழகிரி - Rajiv convicts

தேனி: ராஜீவ் கொலை குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் விடுவிக்க மறுக்கின்றது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கேஎஸ் அழகிரி
author img

By

Published : Apr 5, 2019, 7:38 PM IST

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கம்பத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறும் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பை பற்றி எங்களிடம் விளக்க தேவையில்லை. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தை எந்த ஒரு ஊடகமும் இதுவரை வெளியிடவில்லை. தேர்தலுக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேனியில் காங்கிரஸ் தலைவர் பேட்டி

ஜிஎஸ்டி வரி வியாபாரிகளுக்கு நல்ல திட்டம்தான். ஆனால் அதை முறையாக கட்டமைப்பு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்தி வியாபாரிகளுக்கு நல்லதை செய்வோம். நியூட்ரினோ திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அத்திட்டத்தை செயல்படுத்த மட்டோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் போராடவில்லை. நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் அவர்களை விடுவிக்க மறுக்கின்றது. மேலும் தமிழர்கள் என்பதற்காக அனைத்து கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியுமா? அப்படி என்றால் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்கக்கூடாது. மேலும் இந்த எழுவர் விடுதலையை போன்று வேறு எந்த கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என யாரும் வற்புறுத்துவதில்லை. ஏனெனில் இதற்கு பின்னால் ஒரு சில அமைப்புகள் இருந்து கொண்டு ஆதரவளிக்கின்றனர்" இவ்வாறு அவர் கூறினார்.

Intro: ராஜீவ் கொலை குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் விடுவிக்க மறுக்கின்றது.
காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தேனியில் பேட்டி.

Body: தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து இன்று தேனியில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கே.எஸ்.அழகிரி.
அப்போது அவர் கூறுகையில், வரும் 12ஆம் தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேனி வருகின்றார். அதற்காக தேனி அருகே உள்ள அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள புறவழிச்சாலை பகுதியில் இடத்தை தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடு பணிகள் நடந்து வருகின்றது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறும் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பை பற்றி எங்களிடம் விளக்கத் தேவையில்லை. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதற்கான ஆதாரம் எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை, தேர்தலுக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஜனநாயகம் வெல்லும் பணநாயகம் வெல்லாது ஜிஎஸ்டி கொண்டு வந்து காங்கிரஸ் அரசு, அப்போது அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. ஜிஎஸ்டி வியாபாரிகளுக்கு நல்ல திட்டம் தான். ஆனால் அதை முறையாக கட்டமைப்பு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி ஒழுங்குபடுத்தி வியாபாரிகளுக்கு நல்லதை செய்வோம் என்றார்.
நியூட்ரினோ திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அத்திட்டத்தை செயல்படுத்த மட்டோம். தேனிக்கு வரும் ராகுல் காந்தி மோடி அரசின் தோல்விகளை முன்வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ்க்கு முக்கியம் அதனால் ராகுல் காந்தி தேனி வருகிறார். மோடிக்கு ஓபிஎஸ் முக்கியம் என்பதால் பிரதமர் இங்கு வருகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் போராடவில்லை. நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் அவர்களை விடுவிக்க மறுக்கின்றது. தமிழர்கள் என்பதற்காக அனைத்து கொலைக்குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியுமா?, அப்படி என்றால் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்கக்கூடாது. மேலும் இந்த எழுவர் விடுதலையை போன்று வேறு எந்த கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என யாரும் வற்புறுத்துவதில்லை. ஏனெனில் இதற்கு பின்னால் ஒரு சில அமைப்புகள் இருந்து கொண்டு ஆதரவளிக்கின்றனர் என்றார். மேலும் கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றம் தான் விடுதலை செய்ய வேண்டுமே தவிர,அரசு விடுதலை செய்ய கூடாது என்றார்.
மேலும் இவர்களது விடுதலை குறித்து பரிந்துரை செய்யுமாறு ஆளுநரை யாரும் நிர்பந்திக்க முடியாது, சட்ட வல்லுநர்களும் நீதிமன்றத்தின் வாயிலாகவே குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்குவதால் கவர்னரும் பரிந்துரை செய்ய தயங்குகுவதாகத் தெரிவித்தார்.

Conclusion: இதனிடையே குறுக்கிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பிசியாக இருப்பதாக நக்கலடித்தார்.

பேட்டி : கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.