17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதில், செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற, தெலங்கானா பாஜக முன்னாள் தலைவர் கிஷண் ரெட்டி இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.