ETV Bharat / elections

அமமுக கதிர்காமுவிற்கு மதுரை உயிர்நீதிமன்றம் ஜாமீன்! - பாலியல் புகார்

மதுரை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன் ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 12, 2019, 4:03 PM IST

தேனி, அல்லிநகரத்தைச் சேர்ந்த டாக்டர் கதிர்காமு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பெரியகுளம், சருத்துப்பட்டியைச் சேர்ந்த அனிதா என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அல்லிநகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.

அப்போது, அனிதாவை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2019 ஏப்ரல் 8ஆம் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தற்போது அமமுக தரப்பில் போட்டியிடுகிறேன். ஆகவே, எனக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், அரசியல் காழ்ப்புணர்வுடம் இ்ந்த வழக்கானது பதியப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு சம்பந்தமாக எவ்வித கைது நடவடிக்கையை எடுக்காமலும், முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். பரப்புரை செய்ய வேண்டியுள்ளதால் காவல் துறையினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆகவே, முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் வரும் வெள்ளிக்கிழமை வர எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என உறுதியளிக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன் ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவு .

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த டாக்டர் கதிர்காமு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பெரியகுளம் , சருத்துப்பட்டியை சேர்ந்த அனிதா என்பவர் கடந்த 2015 ம் ஆண்டு அல்லிநகரத்தில் உள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். 

அப்போது அனிதாவை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2019,ஏப்ரல் 8 ம் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பெரியகுளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தற்போது அ.ம.மு.க. தரப்பில் போட்டியிடுகிறேன். ஆகவே, எனக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில்,  அரசியல் காழ்புணர்வுடம் பதியப்பட்ட வழக்கு.

 எனவே இந்த வழக்கு சம்பந்தமாக எவ்வித கைது நடவடிக்கையை எடுக்காமலும், முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால் கால அவகாசம் கோரப்பட்டது.

ஆனார் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். 

பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால் காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

 ஆகவே, முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதனை தொடர்ந்து அரசு தரப்பில் வரும் வெள்ளிக்கிழமை வர எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என உறுதியளிக்க பட்டது. இதனை தொடர்ந்து இன்று விசாரித்த நீதிபதி கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்த புகார்தாரர் உள்நோக்கத்துடன் இருந்ததாக கருதி தற்போது தேர்தல் காலம் என்பதால் புகார் தெரிவிக்க வந்திருப்பதாக கருதி அ ம முக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.