சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண்பவர் கே.ஆர்.எஸ் சரவணன். இவர் தனது குடும்பத்தினரோடு சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சேலம் மக்களவைத் தொகுதியில் சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இந்த தொகுதி என்றுமே அம்மாவின் கோட்டையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.