ETV Bharat / elections

இந்தியா வளர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்- ஜி.கே வாசன் - gk vasan

தூத்துக்குடி: உலக நாடுகளை தாண்டி இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி. கே வாசன்
author img

By

Published : Apr 4, 2019, 6:49 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றியை உறுதி செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.

உலக நாடுகளை தாண்டி இந்தியா வளர்ந்த நாடாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தலைமையிலானஆட்சி மீண்டும் அமைய வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தடம் புரளாமல் ஆட்சி செய்து வருகிறார்கள் .

தமிழிசை இரும்பு பெண்மணி. தனது இயக்கத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தமிழிசை மத்திய அரசுமூலமாக பல திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்"இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றியை உறுதி செய்ய வந்துள்ளேன். அவர் தேர்தலுக்கு பின்பு ஒரு உயர்ந்த நிலையில் இந்தியாவில் செயல்படகூடிய சூழ்நிலையை இந்த தொகுதி ஏற்படுத்த வேண்டும், முதலில் நாம் எல்லோரும் இந்தியர்கள்,  அதன் பின்பு தான் தமிழர்கள்,  இந்தியா பாதுகாப்பு நாடாக, வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளை தாண்டி வளர்ந்த நாடாக சிறக்க வேண்டும், அப்படி ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் நம் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆசியோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், ஜெயலலிதாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தடம் புரளமால் அவரது திட்டங்களை கிராமம் முதல் நகரம் வரை சிறப்போடு செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரு ஆட்சிகளின் தொடர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும், அந்த தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பதனை நாட்டு மக்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும், திமுக,காங்கிரஸ் கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது, மதசார்பின்மையை பற்றி பேசுவதற்கு தகுதியற்ற நிலையை காங்கிரஸ் கட்சி அடைந்துள்ளது. 9 நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளரர்களை நிறுத்தும் காங்கிரஸ் கட்சி ஏன், சிறுபான்மையினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை, அதற்கு காரணம் அவர்கள் மதசார்பின்மை போலியானது, மக்களை ஏமாற்றும் மதசார்பின்மை, மக்கள் இனி அவர்களை நம்பி ஏமாற தயாராக இல்லை, நீங்கள் ஏமாற்ற நினைத்தால் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள், காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை வைத்துள்ளது, 2001ல் திமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரம் பதவி அனுபவித்தார்கள் என்று கேட்க விரும்புகிறேன்.திமுக. காங்கிரஸ் இனி மக்களை ஏமாற்ற முடியாது தூத்துக்குடி தொகுதி இந்தியாவிற்கு ஒரு முக்கியமான தொகுதி. தமிழிசை இரும்பு பெண்மணி தனது இயக்கத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார், மேலும் மத்தியரசு  மூலமாக பல திட்டங்களை கொண்டுவர காரணமாக இருந்தவர் என்றார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில்
நானும். ஜி.கே.வாசனும்  இருவரும் வரிசு தான். ஆனால் வாரிசு அரசியல் கிடையாது, எனது தந்தை, அவரது தந்தையும் அரசியல் செய்தனர். வெற்றி பெற்றனர். இன்று நாங்கள் இருவரும் அரசியல் செய்கிறோம் அதுவே எங்களுக்கு வெற்றி என்றும், தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்ய தான் போட்டியிடுகிறேன், நான் புதியவள் கிடையாது. இந்த மண்ணின் மகள், வாரிசுகள். நேர்மறையான அரசியல் தமிழகத்தில் செய்ய முடியும் என்பதற்கு நாங்கள் தான் உதாரணம் என்றார்.

Photos FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.