தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை சூடுபிடித்துள்ளது. இதில் ஒருபகுதியாக சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ் சரவணுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் அமைந்துள்ள பட்டைக்கோயில் அருகில் இருந்து ராஜகணபதி கோவில் வரை, நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள், துணிக்கடைகள், மருந்தகங்கள், தேனீர் கடைகள் என ஒவ்வொரு கடைகளிலும் நின்று, 'அதிமுகவுக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும்' என்று துண்டு பிரசுரங்களை வழங்கினார் .பின்னர் அவர் கூறியதாவது ," சேலம் மாநகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசல் இல்லாத குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நகரமாக உருவாக்கிட ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மேலும் சேலத்தை பொலிவுடன் மாற்றி அமைக்க அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலைச் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.