ETV Bharat / elections

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல்; 24 மணி நேர பாதுகாப்பு - counting centre

கோவை: மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோவையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன
author img

By

Published : Apr 19, 2019, 1:24 PM IST

மக்களவைத் தேர்தல் நாடெங்கிலும் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று தமிழ் நாடெங்கும் நடைபெற்றது.

கோவையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன

கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்டிராங் ரூமில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கும் வரை சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் 112 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர், வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இவற்றை கண்காணிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தேர்தலின் போது பழுதடைந்த 57 விவிபேட் இயந்திரங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காவல் துறை கட்டுப்பாட்டில் இந்த வளாகம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.       கோவை

கோவை மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது... 

கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கோவை 
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர்
ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில்  ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்டிராங் ரூமில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி,6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.வாக்கு எண்ணிக்கை துவங்கும் வரை சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும்
150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.மேலும்
112 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர்,
வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின்  பிரதிநிதிகள் இவற்றை கண்காணிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தேர்தலின் போது பழுதடைந்த 57 விவிபேட் இயந்திரங்கள்  மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காவல் துறை கட்டுப்பாட்டில் இந்த வளாகம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.