ETV Bharat / elections

நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா? துரைமுருகன் ஆவேசம் - கதிர் ஆனந்த்

வேலூர்: என் வீட்டில் மட்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது, நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா என திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசப் பேச்சு
author img

By

Published : Apr 17, 2019, 10:25 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் நேற்று இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தாங்கள் வேட்டையாடப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

"என் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து பேசிய அவர், என் வீட்டுப் பெண்களை காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அப்படியானால் நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா? திமுக பொருளாளராக ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் என்னை ஒரு கேடி பட்டியலில் வைத்து காவல் துறையினர் வளைத்துப் பார்ப்பது ஏன்? " என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

திமுக பரப்புரை

தொடர்ந்து, "எங்கள் வீட்டில் மட்டும்தான் கத்தை கத்தையாகப் பணம் இருக்கிறதா? வருமான வரித்துறை அலுவலர்கள் என் வீட்டிற்கு வந்து பீரோவை உடைத்து அரிசி மூட்டைகளைத் தள்ளி இரண்டு முறை சோதனை செய்தார்கள். அவர்கள் எடுத்தது என்ன ? வெறும் 10 லட்சம் மட்டும்தானே, 5 பேர் நாங்கள் வரி கட்டுகிறோம் எங்களுக்கு ஆளுக்கு இரண்டு லட்சம் கூட வைத்துக் கொள்ளக் கூடாதா ? ஒரு எம்எல்ஏ கல்யாண விஷேஷத்துற்கு சென்றால் பத்து பைசா கூட இல்லாமல் போக முடியுமா?" என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

பின்னர், தனக்குச் சொந்தமான எல்லா இடங்களிலும் தேர்தல் அலுவலர்கள் சோதனை நடத்தியதாகவும், ஏதோ ஒரு நோக்கத்திற்காக தங்களைச் சோதிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒருவேளை இந்த தேர்தலுக்கு பிறகாவது இந்த தொல்லை விட்டு விடுமா என்று பார்க்கிறேன் என வருத்தத்தோடு தெரிவித்தார்.

எனினும், இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என ஆவேசமாகத் தெரிவித்த துரைமுருகன், தன் மகனை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வீட்டில் என்றாவது வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதுண்டா ? எனத் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.

இவரையடுத்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசுகையில், நான் தொகுதி மக்களுக்காக மக்களவையில் குரல் கொடுப்பேன் என்பதை ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் உரையாற்றினார்.

ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத பாமர மக்களாக இருந்தனர். ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அவர்கள் கடும் குழப்பத்தில் ஒன்றும் புரியாத போல் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், வேலூரில் தேர்தலை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தேர்தல் ஆணையம் அளித்த மனு ஏற்றக்கப்பட்டு, வேலூரில் தற்போதைக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எங்கள் வீட்டில் மட்டும் தான் கத்தை கத்தையாக பணம் இருக்கிறதா ? நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா? - இறுதிக்கட்ட பரப்புரையில் துரைமுருகன் ஆவேசம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அவரது தந்தையும் திமுக பொருளாளருமான துரைமுருகன் இன்று இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார் வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், என் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் வேட்டையாடப்படுகிறோம் எங்கள் வீட்டுப் பெண்களை போலீசார் கண்காணிக்கின்றனர் இன்று கூட என் மனைவி ஒரு கோயிலுக்கு சென்றார. அவள் பின்னால் சிஐடி வண்டி செல்கிறது எனது மருமகள் வாக்கு சேகரிக்க சென்றால் அவர் பின்னால் போலீசார் சொல்கிறார்கள் நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா? நான் ஒரு பொறுப்புள்ள திமுக பொருளாளர் நூறு ஆண்டுகாலம் உடைய திமுக கட்சியின் பொருளாளர் பதவிக்கு நம் மாவட்டத்திலிருந்து நான் தான் வந்துள்ளேன் இவ்வளவு தகுதி படைத்த என்னை ஒரு கேடி லிஸ்டில் வைத்து போலீசார் வளைத்து பார்ப்பது ஏன் ? எங்கள் வீட்டில் மட்டும் தான் கத்தை கத்தையாக பணம் இருக்கிறதா? வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து பீரோவை உடைத்து அரிசி மூட்டைகளை தள்ளி இரண்டு முறை சோதனை செய்தார்கள் நான் கேட்கிறேன் அவர்கள் எடுத்தது என்ன ? வெறும் 10 லட்சம் மட்டும்தானே 5 பேர் நாங்கள் வரி கட்டுகிறோம் எங்களுக்கு ஆளுக்கு இரண்டு லட்சம் கூட வைத்துக் கொள்ளக் கூடாதா ? ஒரு எம்எல்ஏ கல்யாண வீட்டிற்கு விஷேஷ வீடுகளுக்கு சென்றால் பத்து பைசா கூட இல்லாமல் போக முடியுமா? அதை கூட அவர்கள் சுரண்டி விட்டு சென்று விட்டார்கள் என் கல்லூரியில் ரெய்டு நடத்தினார்கள் அங்கே ஏதாவது எடுத்ததுண்டா இரண்டிலும் நாங்கள் எதையும் எடுக்கவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள் அதன்பிறகும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக எங்களை சோதிக்கிறார்கள் இன்று கூட என் வீட்டில் முன்பு இரண்டு பேர் பைக்கில் சென்றார்கள் ஒருவேளை இந்த தேர்தலுக்கு பிறகாவது இந்த தொல்லை விட்டு விடுமா என்று பார்க்கிறேன் ஆனாலும் இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் ஒரு வருடம் வேலூர் சிறையில் இருந்தேன் அப்போது கலைஞர் எனக்கு கடிதம் எழுதினார் "வாலிபத்தின் வசந்தத்தில் இளைப்பாற வேண்டிய நீ வெண் கொடுமையால் சுழல்கிறதா" என்று கேட்டு எழுதினார் அந்த ஒரு வார்த்தைக்காக ஒரு ஆண்டுகள் அல்ல பல ஆண்டுகள் சிறையில் இருப்பேன் என் மகனை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வீட்டில் என்றாவது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுண்டா ? அவர்கள் 5000 பணம் கொண்டு செல்கிறார்கள் சிஐடி போலீஸார் அவர்களைப் பிடித்தது உண்டா? இந்த தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்பதற்காக இரவில் திடீரென ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள் தேர்தலை ஒத்தி வைக்கப் போவதாக அறிவித்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைத்தார்கள் பத்திரிக்கைகள் மூலம் இந்த செய்தியை பரப்பினார்கள் இதை கேள்விப்பட்டு கழகத் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள் ஆனால் எங்கள் தொண்டர்கள் அதையெல்லாம் பார்த்து அஞ்சமாட்டார்கள் டிவியை அணைத்துவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினார்கள். இதேபோல் தகுதி நீக்கம் செய்யலாம் என்று யோசித்தார்கள் என்ன தகுதி நீக்கம். என் மகன் மீது என்ன குற்றம் இருக்கிறது ஒரு குற்றமும் இல்லாத என் மகனை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? இது என்ன முடியரசு நாடா ? இல்லை குடியரசு நாடா? 11 முறை காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளேன் ஒரே தொகுதியில் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற எம்எல்ஏ இந்தியாவிலையே நான் ஒருவன் தான். மக்கள் என்ன பைத்தியக் காரர்களா ? நான் தொகுதியை கோயிலாக பார்க்கிறேன் தொகுதி மக்களை கடவுளாக நினைக்கிறேன் அதே போல் தான் என் மகனும் வேலூர்  தொகுதியை கோவிலாக பார்ப்பார் மக்களை கடவுளாக நினைப்பார் அப்படி செய்தால் தான் அவர் என் மகன் என ஒப்புக் கொள்வேன் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் நீங்கள் அவரை கரைசேர்க்க வையுங்கள் என்று பேசினார்..

ஆங்கிலத்தில் பேசி குழப்பிய வேட்பாளர

கூட்டத்தில் துரைமுருகன் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் பேசுகையில், "நான் தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்பதை ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் உரையாற்றினார் ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத பாமர மக்களாக இருந்தனர். ஆங்கிலப் பேச்சை கேட்டு பொதுமக்கள் கடும் குழப்பத்தில் ஒன்றும் புரியாத போல் அமர்ந்திருந்தனர் மேலும் ஆங்கிலம் பேசுகையில் சில வார்த்தைகளில் தட்டுத்தடுமாறி கதிர் ஆனந்த் பேசினார். இதை கவனித்த உடன்பிறப்புகள், என்னடா இது ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த வேட்பாளர் என்று பெருமை பேசினோமே இப்பவே இப்படி தடுமாறுகிறாரே பாராளுமன்றத்திற்கு சென்றால் எப்படி தடுமாறாமல் பேசுவார் என முணுமுணுத்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.