ETV Bharat / elections

‘எங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்த சரத்குமாருக்கு நன்றி’ - இல.கணேசன்

author img

By

Published : Apr 5, 2019, 8:23 PM IST

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நன்றி தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் இன்று சரத்குமாரை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதோடு, பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 5 தொகுதியிலும் தாமரைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும்படி அவரிடம் இல.கணேசன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்க ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இன்று சரத்குமாரை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கோட்டப் பொறுப்பாளர் சக்கரவர்த்தி, தென்சென்னை மாவட்டத் தலைவர் டால்பின் பா. ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.