உலக அளவில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் கோமதி மாரிமுத்து. இவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். இவரின் சாதனையை போற்றும் விதமாக பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் இவருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். 43 நாடுகள் பங்கேற்ற போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து மிக கடினமான சூழ்நிலையில் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.