ETV Bharat / elections

ரயிலை விட வேகமாக தமிழ்நாடு முன்னேற இரட்டை இலைக்கு வாக்களிங்க...! நடிகர் கார்த்திக் - அதிமுக

மதுரை: ரயிலை விட வேகமாக தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் வாக்காளர்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கார்த்திக்
author img

By

Published : Apr 12, 2019, 7:32 AM IST

மதுரை கீழக்கரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என உங்களிடம் சத்தியம் வாங்க வந்துள்ளேன். ரயிலை விட வேகமாக தமிழ்நாடு வேகமாக முன்னேற வேண்டும் என்றால் வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவை யார் நினைத்தாலும் பிரிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

உங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி என்பது நண்பர்களை போல் இருக்க வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை சத்தியத்திற்கு கட்டுப்பட்டது. அதை நம்பியே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

ஐந்து வருடத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், ஆட்சியாளர்களை மக்கள் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை தெரிந்த திமுக தலைவர் ஸ்டாலின் தனிநபரை குறிவைத்து விமர்சனம் செய்துவருகிறார். இந்தத் தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக கூட இருக்க முடியாது என தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
11.04.2019

மதுரை கீரைத்துறை பகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நடிகர் கார்த்திக் பரப்புரை மேற்கொள்கிறார்.

பரப்புரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செல்லூர் ராஜு பரப்புரையில் பேசியது,

தோல்வியின் விளிம்பிற்கு சென்ற எதிர்க்கட்சியினர் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.

8 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக மீது குற்றம் குறை காண முடியாத எதிர்க்கட்சித்தலைவர் இன்றைக்கு முதல்வர் துணைமுதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை கூறி வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெற முடியாது எதிர்பார்த்த எதுவும் கிடைக்காது என்பதால் ஸ்டாலின் தனிநபர் விமர்சனம் செய்து வருகிறார்.

இல்லாததையும், பொல்லாததையும் பேசி வருகிறார்கள்.

இந்த தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும்.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக கூட இருக்க முடியாது நிலை ஏற்படும்.

மக்கள் திமுகவுக்கு தரமும், தகுதியும் இல்லை என நினைத்து என நினைத்துவிட்டார்கள்.

கலைஞர் அப்பா என்பதால் தான் ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவரானார்.

முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் இல்லை என்ற கோப்பில் கையெழுத்திட்டது கலைஞர் என ஸ்டாலினுக்கு தெரியாதா?

முழுக்க உண்மைகளை மறைத்து அனுதாப வாக்குகளை பெற முயற்சிக்கிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதா நம்மைவிட்டு மறைந்ததற்க்கு காரணம் திமுக தான்.

தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டது திமுக.

கிட்டத்தட்ட 13 வழக்கில் நிரபராதியாக தீர்ப்பு சொல்லப்பட்டவர் ஜெயலலிதா.

மக்களை ஏமாற்றி குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவின் அராஜகத்தை அறிந்தவர்கள். லீலாவதியை கொலை செய்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். 

மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதுவும் தெரியாது என செல்லூர் ராஜூ பேசினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்திக்,

ராஜ்சத்யனுக்கு வாக்குசேகரிக்க உங்களிடம் சத்தியம் வாங்க வந்துள்ளேன்.

இரயிலை விட வேகமாக முன்னேற நீங்கள் இரட்டைஇலைக்கு வாக்களிக்க வேண்டும்.

மனித சரித்திரத்தை சரியாக படிக்காதவர்கள் குடும்ப அரசியலை பற்றி பேசுவார்கள்.

உங்களின் பிள்ளையாக சகோதரனாக வந்திருக்கிறேன்.

இரட்டைஇலை வளர்ந்துகொண்டே இருக்கிறது.

அதிமுகவை யார் நினைத்தாலும் பிரிவுக்கவும் அசைக்கவும் முடியாது.

பிள்ளைகளின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும், மக்களின் எதிர்காலமும் நன்றாக இருக்க மத்தியிலும் மாநிலத்திலும் நண்பர்களாக இருக்க வேண்டும்.

முதல்வரும், துணைமுதல்வரும் என்னை சந்தித்து வரச்சொன்னபோது உடனே வருகிறேன் எனச்சொன்னவன் நான்.

மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன்.

தேர்தல் அறிக்கை சத்தியத்திற்கு கட்டுப்பட்டது.அதை நம்பியே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

5 வருடத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் எதை வேண்டுமானலும் சொல்லலாம் எத்தனை பொய்களை வேண்டுமானாலும் கூறலாம் என நினைத்து பிரதமர் வேட்பாளர் யார் எனக்கூட சொல்லாமல் எதிர்க்கட்சியினர் உள்ளனர் என நடிகர் கார்த்திக் பேசினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_11_KARTHICK SPEECH_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.