ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 595 பதவிகளுக்கு 1130 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பலரும் ஆர்வத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தாளவாடி மலைப்பகுதி என்பதால் மாலை வரை வேட்புமனுத் தாக்கல் நீடித்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த பலர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. தேர்தலின்போது யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை கட்சி அங்கீகரிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்...!'