குஜராத் மாநிலம் பதான் பகுதியில் பாஜக சார்பாக பிரம்மாண்ட பொதுகூட்டம் நடத்தப்பட்டது. அங்கு பாஜகவுக்கு சார்பாக பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்துபோது அந்நாட்டுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். அவருக்கு ஏதேனும் தவறுதலாக நடந்தால் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் எனக் கூறியதாக மோடி தெரிவித்தார்.
பிப்ரவரி 27ஆம் தேதி மிக்-21 போர் விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் அபிநந்தன் இயக்கி சென்றார். அதனை பாகிஸ்தான் விமானப்படையினர் தாக்கியதை தொடர்ந்து பாராசூட் மூலம் தப்பிய அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி அபிநந்தன் இந்தியாவுக்கு திரும்பினார்.