ETV Bharat / elections

திக் விஜய சிங்குக்கு ஆதரவாக கனையா குமார் பரப்புரை!

போபால்: காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய சிங்குக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெகுசராய் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனையா குமார் பரப்புரை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

திக் விஜய சிங்
author img

By

Published : Apr 29, 2019, 9:24 AM IST

Updated : Apr 29, 2019, 11:33 AM IST

மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங்கும், பாஜக சார்பாக மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் வெளியே உள்ள சாத்வி பிரக்யா தாக்கூரும் போட்டியிட உள்ளனர். இதனால் இத்தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், திக் விஜய் சிங்குக்கு ஆதரவாக பிகார் மாநிலம் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனையா குமார் பரப்புரை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து திக் விஜய சிங் கூறுகையில், "நான் கனையா குமாரின் தீவிர ரசிகன். அவர் நல்ல கொள்கையை உடையவர். ராஷ்டிரிய ஜனதா தளம் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது தவறு. பெகுசராய் மக்களவைத் தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓதுக்கி இருக்க வேண்டும் என நான் என் கட்சி மேலிடத்தில் கூறினேன். இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணியை முறித்ததுதான் 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு காரணம்" என்றார்.

மேலூரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 2 அடி உயரமுள்ள அம்மன் சிலையை மீட்ட சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் : 

மதுரை மாவட்டம் மேலூர் நகைகடை தெரு பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு 1915 ஆம் ஆண்டு கோயிலிலிருந்த 2 அடி நீளமுள்ள அம்மன் சிலை மாயமானதாக அப்போது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போதே மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது கோவிலில் நாரயணமூர்த்தி, கந்தசாமி ஆகிய இருவர் பூஜாரியாக இருந்த நிலையில் காணமல் போயிள்ளது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையிலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கோயில் நிர்வாகம்  சார்பில் சிலையை மீட்க கோரி அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி மலைச்சாமி தலைமையிலான குழுவினர் கோயில் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்த போது அப்போது பூசாரியாக பணியாற்றிய கந்தசாமி வீட்டிலிருந்து சுமார் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னிலான அம்மன் சிலை சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதனை திரௌபதியம்மன் கோயிலுக்கு கொண்டுவந்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும் காணமல்போனதாக கூறப்பட்ட சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் பூஜாரி மறைத்து வைத்த சம்பவம் குறித்து   காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visuals in FTP)
Last Updated : Apr 29, 2019, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.