ETV Bharat / elections

நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 117 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு
author img

By

Published : Apr 23, 2019, 7:30 AM IST

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 17ஆவது மக்களவைத் தேர்தலான இதில், ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட 18 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபர் தீவு, லட்சத் தீவுகள் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் என, மொத்தம் 91 தொகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, 18 ஆம் தேதி, தமிழகம், அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, உத்தர பிரதேசம், வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி என 13 மாநிலங்களில் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களிலும், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் உள்ள 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.