வேலூர்: தனியார் பேக்கரி தயார் செய்யும் கட்சிக் கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்குகள் வாடிக்கையாளர்களை ஈர்த்துவருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் களம் காணும் அனைத்துக் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சூழலில், வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த தனியார் பேக்கரி உரிமையாளர், தேர்தலையொட்டி மக்களையும், கட்சியினரையும் கவரும் வகையிலும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கிலும் பல்வேறு கட்சிகளின் சின்னம், கொடிகள் ஆகியன பொறிக்கப்பட்ட கேக்குககளைத் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சின்னம், கொடி பொறிக்கப்பட்ட கேக்குகளைத் தற்போது தயாரித்துவருகிறார். இதற்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.