சென்னை, பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்நாடு முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி மை இந்தியா பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். இராமபுரத்தை சேர்ந்த இவருக்கு பம்மலில் தேர்தல் பரப்புரையின்போது ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்ததாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சங்கர் நகர் காவல் துறையின்ர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக, ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் காவ்ல துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அவனை தானே கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் என வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களாக அந்த அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்ததால் அதை கண்டித்து சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறி நின்று ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபரை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என தர்னாவில் ஈடுபட்டு வருகின்றார்.இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வாக்களிக்கும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை