ETV Bharat / elections

திமுக தேர்தல் அறிக்கையை தவிடுபொடியாக்கிய இலவச சமையல் எரிவாயு - விஜயபாஸ்கர்

author img

By

Published : Mar 20, 2021, 9:43 AM IST

Updated : Mar 20, 2021, 1:35 PM IST

“கச்சா எண்ணெய் விலை சந்தையில் உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இதை கருத்திற்கொண்டு வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையை தவிடுபொடி ஆக்கியுள்ளது” என தேர்தல் பரப்புரையின் போது போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.

karur admk candidate vijayabaskar campaign

கரூர்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான மண்மங்கலம் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டி பகுதியில் மார்ச் 19ஆம் தேதி இரவு 8 மணியளவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

முன்னதாக ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தனது உரையைத் தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் ஐந்தாண்டு நிறைவுற்றிருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் வாய்ப்பளித்தனர். ஆறு மாதத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு மறைந்ததால், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

வெற்றிகரமாக 10 ஆண்டுகளை அதிமுக அரசு நிறைவுசெய்து மக்களுக்குத் தேவையானதைச் செய்துவிட்டுத் தேர்தலில் சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம். உழவர்களுக்குக் கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற 6 பவுன் நகைக் கடன் தள்ளுபடி என நல்ல திட்டங்களை எல்லாம் செய்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம்.

மாறாக திமுகவோ நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவருகின்றனர். கடந்த முறை ரூ.6000 கோடி வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது. இம்முறை அதிமுக அரசு ரூ.12,150 கோடி வேளாண் பயிர்க்கடனை ரத்துசெய்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சந்தையில் உயர்ந்துவருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்துவருகிறது. இதைக் கருத்திற்கொண்டு ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தவிடுபொடி ஆக்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அமராவதி ஆற்றில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் உழவர்களுக்கு நீதிமன்றம் வரை சென்று அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.127 கோடியில், கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் உழவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வடிகால் அமைக்கும் பணி, தெரு சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். எனவே, எனக்கு மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்ற வாய்ப்பு வழங்குங்கள். மூன்றாவது முறையாக அதிமுக அரசு ஆட்சி அமைக்க வாக்களியுங்கள்” என்று பேசினார்.

அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை

அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேரடியாக மோதுகின்றனர். அதிமுக சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக சார்பில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் களத்தில் பலம்வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை தங்களின் பேச்சாலும், செயல்பாட்டினாலும் களத்தில் இறங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணியாற்றிவருகின்றனர். இருவருக்கும் இத்தொகுதியில் வெற்றிபெறுவது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

Last Updated : Mar 20, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.