சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்பி, கரோனா கவச உடை அணிந்து வந்து வாக்களித்துச் சென்றார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கரோனா கவச உடை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கரோனா கவச உடையணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். தேர்தல் பணியாளர்களும் கவச உடை அணிந்திருந்தனர். இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி" என தெரிவித்தார்.