ETV Bharat / crime

புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்! - இளைஞர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

youngster arrest
youngster arrest
author img

By

Published : Jul 3, 2021, 7:01 AM IST

சென்னை: தண்டையார் பேட்டை கேசவன் தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் சின்ன தம்பி என்ற சின்னா (18). இவர் காசிமேடு, புதுமணைக்குப்பம் 4ஆவது தெருவில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 16 வயதான சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பல முறை அச்சிறுமியின் விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சிறுமியின் பாட்டி, ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். உடனே சின்னதம்பியை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீ குளித்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.