ETV Bharat / crime

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்று உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் உயிரிழப்பு
தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் உயிரிழப்பு
author img

By

Published : Jan 22, 2021, 6:19 AM IST

கரூர்: கரூரை அடுத்த தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் தம்பதியர்,சுப்பிரமணி - செல்வி. இவர்களது மகள், திலகவதி (25). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திலகவதிக்கும், விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தனியாக வசித்து வந்த புதுமணத் தம்பதியர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த திலகவதி, கடந்த,19 ஆம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த உறவினர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பெற்று வந்த திலகவதி, சிகிச்சை பலனின்றி, 20 ஆம் தேதி காலையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாந்தோனிமலை காவல்துறையினர், திருமணமான 6 மாதத்திற்குள் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக் கொலை? – காவல்துறையினர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.