ETV Bharat / crime

காதலித்த பெண்ணை நிச்சயம் செய்யும் வேளையில் தவறிய காவலரின் மனம்!

ஏலகிரி மலையில் இறந்த நிலையில் காவலர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாகக் காதலித்த பெண்ணை பிப்ரவரி 8ஆம் தேதி நிச்சயம் செய்யும் நிகழ்வை வைத்துவிட்டு, காவலர் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

young police man suicide in thirupathur
young police man suicide in thirupathur
author img

By

Published : Feb 5, 2021, 6:18 AM IST

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் பயிற்சி முடித்த காவலர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான பூவரசன் (24), 2020ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஓராண்டுப் பயிற்சி முடித்த நிலையில், கோயம்புத்தூர் உள்ளூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியமர்த்தப்பட்டார்.

ஊரில் கழிந்த விடுமுறை

இவ்வேளையில், இவரது உறவினரின் திருமணத்திற்காக ஜனவரி 31ஆம் தேதி, மூன்று நாள் விடுமுறை கேட்டு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்து பிப்ரவரி 2இல் மீண்டும் பணியில் சேரவிருந்த பூவரசனின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்குத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தான் மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த, ஜோலார்பேட்டை அருகேயுள்ள குடியான குப்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு இவரின் பெற்றோர் அழைத்துப் பேசியுள்ளனர்.

இரு வீட்டாரின் உரையாடல் சமரசத்தில் முடிய, பூ மாற்றிக்கொள்ளும் நிகழ்வை நடத்தி முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 8ஆம் தேதி பெண்ணின் வீட்டிற்கு நிச்சயம்செய்ய வருவதாகப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, வெளியே சென்ற பூவரசன் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

வீடு திரும்பாத பூவரசன்

இதனால் பதறிப்போன அவரது பெற்றோர், அவரை கைப்பேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவரது கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டுள்ளதாகப் பதில் வந்துள்ளது. இதனையடுத்து இவரின் உறவினர்கள் பூவரசனுடன் இருந்த நண்பர்களிடம் விசாரித்தபோது, மேட்டு சக்கர குப்பம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பூவரசனைப் பார்த்ததாகவும், அவர் தான் பொன்னேரிக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில், நேற்று முன்தினம் இரவு (பிப். 3) முழுவதும் எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் துறையினர் உதவியுடன் அவரது கைப்பேசி எண்ணைக் கொண்டு தேடியுள்ளனர். வாரக் கோட்டை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் சுமார் 500 மீட்டர் தொலைவில் அவரின் இருசக்கர வாகனமும், தொடர்ந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இறந்த நிலையில் அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டது. அவர் அருகில் மது குப்பிகளும், பூச்சி மருந்து பொட்டலமும் கிடைத்துள்ளன.

மரணத்தில் சந்தேகம்

இதனைக்கண்ட உறவினர்களும், பெற்றோரும் கதறி அழுதுள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

காதலித்த பெண்ணுடன் பிப்ரவரி 8ஆம் தேதி நிச்சயம் நடக்கவிருந்த வேளையில், மதுவில் நஞ்சு கலந்து பூவரசன் தன் உயிரை மாய்த்துக்கொண்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் ஏதாவது எதிர்ப்பு காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது போன்ற கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.