ETV Bharat / crime

பெண் மருத்துவரை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது! - பெண் மருத்துவரை கர்ப்பமாக்கிய ஆண் மருத்துவர்

சென்னை: பெண் மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டு ஏமாற்றிய ஆண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண் மருத்துவரை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது

author img

By

Published : Feb 19, 2021, 10:58 AM IST

சென்னை வேளச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அதே மருத்துவமனையில் காட்டாங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திக் (22) என்பவரும் பணியாற்றி வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னாளில், கார்த்திக் அந்த பெண் மருத்துவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமடைந்த அப்பெண் இதுகுறித்து கார்த்திக்கிடம் தெரிவித்த போது, கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அப்பெண் மாத்திரை சாப்பிட்டு கர்ப்பத்தை கலைத்துள்ளார். சில நாள்களுக்கு பிறகு கார்த்திக் அப்பெண்ணுடன் பேசாமல் இருந்துள்ளார். மேலும் அவருடனான காதலை முறித்துக்கொண்டு, அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகாரளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்து விசாரித்ததில் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் கார்த்திக், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் பெற்றோர் முன்னிலையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், பெண்ணின் பெற்றோர் வீட்டிலேயே அவரை கார்த்திக் விட்டுச் சென்றார்.

தற்போது அப்பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், தான் திருமணம் செய்தது செல்லாது என கார்த்திக் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதால், பெண் மருத்துவர் மீண்டும் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர்.

இதையும் படிங்க: குழந்தை இல்லாத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.