மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் இந்திரா. இவரது கணவர் ஆதப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இதனையடுத்து இவர்களது மகன் கணேசன், மகள் நாகலட்சுமி இருவரும் மருத்துவப் படிப்பு முடித்து தற்சமயம் வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிகின்றனர்.
தற்போது மதுரையில் இந்திரா தனியாக வசித்துவரும் சூழலில் நேற்று (செப். 9) சொந்த ஊரான மதகுபட்டி அருகேயுள்ள நாட்டரசன்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்றுவிட்டு மதுரை திரும்பியுள்ளார்.
அச்சமயம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பும்போது, எதிரே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று மருத்துவர் இந்திரா ஓட்டி வந்த கார் மீது சாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இந்திரா உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியோடு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுமார் மூன்று மணிநேரம் போராடி இந்திராவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையெடுத்து லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் அஜித் என்பவரை கைது செய்த காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்..
இதையும் படிங்க: 'மகனுக்குப் பதிலாக தந்தை வெட்டிக் கொலை - 6 பேர் கைது'