ETV Bharat / crime

மசாஜ் செய்யும் வேலை தருவதாக கூறி நகைபறித்த கில்லாடி பெண் கைது - மூவரை போலீசார் கைது செய்தனர்

ஓ.எல்.எக்ஸ் ஆப்பில் பியூட்டிஷியன் வேலைக்காக பதிவு செய்யும் பெண்களை, அதிக சம்பளத்திற்கு மசாஜ் செய்யும் வேலை தருவதாக அழைத்துச் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட கில்லாடி பெண் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மசாஜ் செய்யும் வேலை தருவதாக கூறி நகைபறித்த கில்லாடி பெண் கைது

author img

By

Published : Oct 13, 2022, 4:12 PM IST

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த சுமித்ரா, மற்றொரு பெண் இணைந்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் ஒரு வாரத்திற்கு முன்பு ஓ.எல்.எக்ஸ் ஆப்பில் பியூட்டிஷியன் வேலைக்கு அப்ளை செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் நந்தினி என்பவர் தொலைபேசி வாயிலாக தங்களை தொடர்பு கொண்டு மசாஜ் தொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அதிகபட்ச பணம் வழங்குவதாக அப்பெண் மனதை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் வடபழனி மசூதி தெருவில் அமைந்துள்ள லாட்ஜ் ஒன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் வருவார்கள், அவர்களுக்கு மசாஜ் செய்த பின்பு அதற்கான தொகை வழங்குவதாக அப்பெண் தெரிவித்ததாக கூறினர்.

இதனையடுத்து லாட்ஜிக்கு சென்ற சுமித்ரா வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்ததாகவும், அப்போது மசாஜ் செய்ய வந்த வாடிக்கையாளர்கள் இருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சுமித்ராவிடமிருந்து 2 சவரன் நகை, செல்போன்,1,500 பணம் மற்றும் மற்றொரு பெண்ணிடமிருந்து 5.5 சவரன் நகை, ஐயாயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை அந்த நபர்கள் பறித்து சென்றதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட நெசப்பாக்கத்தை சேர்ந்த மோனிஷ் குமார்(19) மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த சந்தோஷ் குமார்(24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதில் நகையை பறித்து சென்றதாக புகார் அளித்த சுமித்ராவே திட்டமிட்டு நாடகமாடி இது போன்று நகைப்பறிப்பில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் புகார் அளித்த சுமித்ராவின் நிஜ பெயர் தீபிகா என்பதும் அவர் வியாசர்பாடியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஓ.எல்.எக்ஸில் பியூட்டிஷியன் மற்றும் மேக்கப் வேலைகளுக்கு பதிவு செய்யும் பெண்களை குறிவைத்து, தீபிகா, நந்தினி என பெயரில் தொலைபேசியில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்தது.

பின்னர் அதிக பணம் தருவதாக அப்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மசாஜ் செய்ய இளம்பெண்களை லாட்ஜிற்கு வரவழைப்பதும், அப்போது ஏற்கனவே வாடிக்கையாளர் போல் தயார் நிலையில் இரண்டு ஆட்களை வைத்து, வேலைக்கு வரும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நகைப்பறிப்பில் ஈடுபட்டவுடன் மசாஜ் வேலைக்காக வந்த பெண்ணிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், பாலியல் தொழிலில் ஈடுபட்டது வீட்டிற்கு தெரியவந்து விடும், இதனால் புகார் அளிக்க வேண்டாம் என தீபிகா அந்த பெண்களை மனதை மாற்றியும் நடித்து வந்துள்ளார்.

இதே போல தீபிகா ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் மசாஜ் செய்ய வரும் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு அருகே வைத்து தீபிகாவை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் அதிகளவில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.