ETV Bharat / crime

ரசீது இருக்கா - கே.சி.வீரமணியை நெருங்கும் மண் பதுக்கல் வழக்கு! - திருப்பத்தூர் செய்திகள்

முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல்
வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல்
author img

By

Published : Sep 19, 2021, 1:36 PM IST

திருப்பத்தூர்: முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் செப்., 16 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில், ரொக்கப்பணம், அந்நிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள், 5 ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், தங்க வைர நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேலும், கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 275 யூனிட் மணல் சிக்கியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கனிமவளத்துறைக்கு தகவல் கொடுத்தது.

அதன் பேரில் நேற்றிரவு (செப்., 18) வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அலுவலர்கள் கே.சி.வீரமணி வீட்டின் பின்புறம் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்ததில், 551 யூனிட் மணல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் அரசு மதிப்பு ஒரு யூனிட் ரூ. 2,000 என்றும் சந்தை மதிப்பு ரூ.4,000 முதல் ரூ.6000 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு 33 லட்சமாகும். இதன் மதிப்பு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாறும்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடங்க உள்ளது.

என்ன பயன்பாட்டுக்காக மணல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ரசீது இருக்கிறதா என விசாரணை தொடங்கும். ரசீது இல்லாதபட்சத்தில் வருவாய்த்துறை மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

பத்திர எழுத்தர் வீட்டில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்களை விரைந்து பிடித்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.