மேற்கு அசாமின் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று முன் தினம் (ஜுன்.11) பிற்பகலில் 14 மற்றும் 16 வயது நிரம்பிய சகோதரிகளான இரண்டு சிறுமிகள் காணாமல் போனதையடுத்து, இருவரையும் கண்டுபிடித்துத் தருமாறு அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் அன்று இரவே அக்கிராமத்திலுள்ள ஒரு காட்டுக்குள் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோக்ராஜர் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதையும் படிங்க:சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக மகளிரணி துணைத் தலைவர் கைது!