ETV Bharat / crime

பழங்குடியின மாணவர்களின் நிதியுதவியை கையாடல் செய்த இரண்டு தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம்! - கூடலூர்

பழங்குடியின மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட நிதியுதவியை கையாடல் செய்த இரண்டு அரசு பள்ளி தலைமையாசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து, அலுலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TWO HM WAS SUSPENDED FOR CHEATING TRIBAL STUDENTS STIPEND, TRIBAL STUDENTS STIPEND , TWO HM WAS SUSPENDED IN NILGIRI
two-hm-was-suspended-for-cheating-tribal-students-stipend
author img

By

Published : Apr 21, 2021, 12:07 AM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய ஊர்களில் வனப்பகுதி அதிகமாக உள்ளதால் அதிகளவிலான பழங்குடியின மக்கள் வனப்பகுதியை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க பல்வேறு வசதிகளுடன் நீலகிரி மாவட்டம் முழுவதும் 22 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தேவலா பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 67 பழங்குடியின மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேபோன்று பொன்னானி பகுதியில் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 70 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். தேவலா பள்ளியின் தலைமையாசிரியராக பாக்கியசேனன் என்பவரும், பொன்னானி பள்ளியில் தலைமையாசிரியராக சேகர் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

கடந்த கரோனா பொதுமுடக்க காலக்கட்டத்தில் பழங்குடியின மாணவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் தமிழ்நாடு அரசு சார்பாக 6ஆயிரத்து 300 ரூபாய் பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களுக்கு வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி பள்ளியின் தலைமையாசிரியருக்கு அந்த பணமும் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெற்றோர்கள் சிலர் அரசால் வழங்கப்பட்ட பணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். புகாரையடுத்து அலுவலர்கள் பள்ளிகளிலும், பெற்றோரிகளிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல மாணவர்களின் பணத்தை இரண்டு தலைமையாசிரியர்களும் கையாடல் செய்தது உறுதியானது.

இதனால், மாவட்ட ஆட்சியர் இரண்டு தலைமையாசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கையாடல் செய்த பணம் மேலும் அதிகரிக்கலாம் என்ற கோணத்தில் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.